செய்திகள்

‘சம்பாதிப்பதை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் போட விரும்புகிறேன்’: கமல்ஹாசன்

26th May 2022 11:47 AM

ADVERTISEMENT

 

சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் போட விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே படத்திற்கான புரமோஷன் பணிகளில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்தால்...: கவனம் பெறும் வீட்ல விசேஷம் டிரைலர்

இந்நிலையில், நேற்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல்ஹாசன் “நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் திரும்ப சினிமாவில் தான் போடுவேன் என சொன்னபோது கை தட்டினார்கள். ஆனால், இப்போது சம்பாதித்ததை சினிமாவையும் தாண்டி அரசியலிலும் போட விரும்புகிறேன். விக்ரம் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்” என தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்டோர் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT