செய்திகள்

’விஜய் 66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு

26th May 2022 08:19 PM

ADVERTISEMENT

விஜய் நடிக்கும் 66-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. 

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிக்க | ரித்திகா சிங்கின் இசை விடியோ வெளியீடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT