செய்திகள்

பிரசாந்த் நடித்த அந்தகன்: 2-வது பாடல் வெளியானது

26th May 2022 06:09 PM

ADVERTISEMENT

 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக்கொண்டார். அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள். 

ADVERTISEMENT

இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ரவி யாதவ், வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். 

அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள 2-வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT