செய்திகள்

விக்ரம் படத்தின் ‘போர்கண்ட சிங்கம்’ பாடல் வெளியீடு

25th May 2022 11:35 AM

ADVERTISEMENT

 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின்  ‘போர்கண்ட சிங்கம்’ பாடலின் லிரிக் விடியோ இன்று வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே படத்திற்கான புரமோஷன் பணிகளில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

அனிருத் இசையமைப்பில் உருவான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘போர்கண்ட சிங்கம்’  பாடலின் லிரிக் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்டோர் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT