செய்திகள்

ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம்: டிரெய்லர் வெளியீடு எப்போது?

25th May 2022 12:45 PM

ADVERTISEMENT

 

மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்கியுள்ளார்.

பதாய் ஹோ என்கிற ஹிந்தி படத்தின் ரீமேக்கை என்ஜே சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. தமிழில் இப்படத்தின் பெயர் - வீட்ல விசேஷம். 2018-ல் வெளியான பதாய் ஹோ படத்தில் ஆயுஷ்மண் குர்ரானா, நீனா குப்தா நடித்தார்கள். இயக்கம் - அமித் ரவீந்திரநாத் சர்மா. வசூல் ரீதியில் அசத்தியதோடு, இரு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றது. 25 வயது கதாநாயகனின் அம்மா திடீரென ஒருநாள், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவார். வயதாகிவிட்டாலும் கருவை அழிக்கக்கூடாது என வயதான தம்பதியினர் குழந்தை பிறப்பதை எதிர்பார்ப்பார்கள். இதை அவர்களுடைய இரு மகன்களும் குடும்பத்தினரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. 

ஆயுஷ்மண் குர்ரானா வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். ஊர்வசி, சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் சில காட்சிகள் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஜூன் 17 அன்று வெளியாகும் வீட்ல விசேஷம் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT