செய்திகள்

50-வது பிறந்த நாளன்று ஆக்‌ஷன் பட அறிவிப்பை வெளியிட்ட கரண் ஜோஹர்

25th May 2022 04:36 PM

ADVERTISEMENT

 

தனது 50-வது பிறந்த நாளன்று புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர்.

1998- குச் குச் ஹோதா ஹை படத்தில் இயக்குநராக அறிமுகமானார் கரண் ஜோஹர். தயாரிப்பாளர் யாஷ் ஜோஹரின் மகன். கபி குஷி கபி கம், கபி அல்விடா நா கெஹ்னா, மை நேம் ஈஸ் கான் ஸ்டூடண் ஆஃப் தி இயர், பாம்பே டாக்கீஸ், ஏ தில் ஹை முஷ்கில் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றார். ஓடிடிக்காக லஸ்ட் ஸ்டோரீஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ் படங்களில் தலா ஒரு பகுதியை இயக்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றிய கரண் ஜோஹர், பல படங்களைத் தயாரித்துள்ளார்.

கடைசியாக 2016-ல் படம் இயக்கிய கரண் ஜோஹர், ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கும் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் கரண் ஜோஹர். இந்த நாளில் தனது புதிய பட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு என்னுடைய படங்களுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தது. ஆனால் இந்தச் சிறப்பான நாளில் நான் இயக்கும் அடுத்தப் படம் பற்றி கூற விரும்புகிறேன். ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி படம் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது. என்னுடைய ஆக்‌ஷன் படத்துக்கான படப்பிடிப்பை 2023 ஏப்ரலில் தொடங்குகிறேன் என்றார். 

Tags : birthday
ADVERTISEMENT
ADVERTISEMENT