நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.
மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்கியுள்ளார். பதாய் ஹோ என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் திரைப்படத்தை இயக்குநர் சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க | நயன்தாராவின் ஓ2 திரைப்பட முதல் பாடல் வெளியீடு அறிவிப்பு
நடிகர்கள் ஊர்வசி, சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.
ADVERTISEMENT
இந்தத் திரைப்படமானது ஜூன் 17 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.