செய்திகள்

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ஹிப்ஹாப் ஆதி

25th May 2022 03:34 PM

ADVERTISEMENT

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தனி இசைக் கலைஞராக இருந்த ஹிப்ஹாப் ஆதி பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார், அதனைத் தொடர்ந்து மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.  இந்நிலையில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். 

இதையும் படிக்க | ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க: டிரெய்லர் வெளியீடு எப்போது?

மரகத நாணயம் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் ஏஆர்கே சரவண் இயக்கும் இந்தத் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. வீரன் எனத் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஆதி இசையமைக்க உள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT