செய்திகள்

‘தி கிரே மேன்’ டிரைலர் இன்று வெளியாகும்

24th May 2022 12:41 PM

ADVERTISEMENT

 

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் டிரைலர் இன்று (மே-24) வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் புதிய திரைப்படம் ‘தி கிரே மேன்’ . இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  

ADVERTISEMENT

‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகிற ஜுலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT