செய்திகள்

சாமி ஏதாவது வேலை இருக்குதா?: இளையராஜாவிடம் கேட்ட ரஜினி

24th May 2022 04:37 PM

ADVERTISEMENT

 

தனது பிறந்த நாளான ஜூன் 2 அன்று கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6.30 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பிரபல பின்னணி பாடகா்கள் பலா் பங்கேற்க இருப்பதால் இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோா் திரள வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இன்று காலை வருகை தந்தார் இளையராஜா. அதன்பிறகு இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையைப் பார்வையிட வந்தார் ரஜினி. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, சாமி ஏதாவது வேலை இருக்குதா என்று ரஜினிகாந்த் விசாரிக்க, என் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 2-ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன் என இளையராஜா கூறியுள்ளார். அப்படியா... நானும் அங்கே வருகிறேன் என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்துச் சென்றார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க - கறுப்பு வெள்ளை கலர்: ரஜினி காதல் வளர்த்த கதை! தம்பதியாக வெளியிட்ட தகவல்

ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒத்திகைப் பணிகளையும் சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்குக் கைத்தட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார் என்று கூறப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT