செய்திகள்

விக்ரம் படத்தில் கமலுக்கு ஒப்பனையாளர் யார் தெரியுமா?

24th May 2022 11:00 AM

ADVERTISEMENT

 

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் அனிரூத் இசையமைப்பில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உட்பட நிறைய தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள படம் விக்ரம்.  

படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் யூடியூப் சேனல்களுக்கு  பேட்டியளித்து வருகிறார். அதில் ஒருப் பேட்டியில் விக்ரம் படம் முழுவதும் கமலுக்கு ஒப்பனையாளராக தானே பணிபுரிந்ததாகக் கூறினார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: விக்ரம் படத்தின் கால அளவு 

ஒரு படத்தின் இயக்குநரே ஒப்பனையாளராக மாறியது ரசிகர்களிடையே படத்தைப் பார்க்க ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஜுன் -3இல் படம் வெளியாகயுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT