செய்திகள்

கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?

24th May 2022 04:47 PM

ADVERTISEMENT

 

கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலின் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி உலக அளவில் வசூலைக் குவித்துக்கொண்டிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து, தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆரை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார்.

இந்நிலையில், ஜுனியர் என்டிஆர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் கமல்ஹாசனிடம் பிரசாந்த் நீல் பேசியதாகவும் கதை பிடித்திருந்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜுன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT