செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் ‘விடுதலை’ விஜய்சேதுபதி

21st May 2022 06:14 PM

ADVERTISEMENT

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிக்க | விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ADVERTISEMENT

இப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முழுவதும் வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படக்குழு சார்பில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT