செய்திகள்

சிறு பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும்: உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை

21st May 2022 05:44 PM

ADVERTISEMENT

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி நடிப்பில் வெளியாகியுள்ள படம் - நெஞ்சுக்கு நீதி. இசை - திபு நினன் தாமஸ், படத்தொகுப்பு - ரூபன், ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன். ஹிந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் இது. 

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தைப் பாராட்டி பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார். மேலும் உதயநிதியிடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்ப்பிக்கும் விதமாகச் சிறப்பாக இருந்தது நெஞ்சுக்கு நீதி. அன்று நான் சொன்னது போல இதுபோன்ற படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்குக் கருத்துலகமும் கைவிடாது. அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டால் நடிகர்கள், இயக்குநர்கள், புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினைச் சொல்லி மகிழும் தருணத்தை எதிர்நோக்கி... வாழ்த்துகள் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT