செய்திகள்

‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

20th May 2022 12:22 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இரவின் நிழல்’. இப்படம் உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக நான் லீனியர் வகையில் ஒரே ஷாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘மாயவா தூயவா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்  தற்போது ‘இரவின் நிழல்’ திரைப்படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

நடிகர் பார்த்திபனுடன்  வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மேலும், இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விரைவில் திரையிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT