செய்திகள்

விரைவில் அறிமுகமாகிறது கேரள அரசின் ‘ஓடிடி’ தளம்

20th May 2022 11:36 AM

ADVERTISEMENT

 

கேரள மாநிலம் புதிய ஓடிடி தளத்தினை அறிமுகப்படுதியுள்ளது. இதுதான் இதியாவிலே ஒரு மாநில அரசு உருவாக்கிய முதல் ஓடிடி தளம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரள அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி கலாபவன் திரையரங்கில் புதன்கிழமையன்று (மே-18) புதிய ஓடிடியின் அறிமுகப்படுத்தி அதன் பெயரினை வெளியிட்டார். ‘சிஸ்பேஸ்’ ( cspace) என்பது கேரள அரசின் புதிய ஓடிடி தளம். சி (c)- சினிமா மற்றும் சித்ராஞ்சலி கேரள மாநில சினிமா முன்னேற்றக் கழகத்தின் அமைப்பை குறிப்பதாக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய சினிமாவிற்கு புதிய குரல்: மாதவன் படத்தை வியந்து பாராட்டிய ஏ.ஆர்,ரஹ்மான்

ADVERTISEMENT

இதைத் தொடங்கி வைத்துப் பேசிய கேரள மாநில சினிமா முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஷாஜி என்.கருண் கூறியதாவது:

"முதலில் திரையரங்கத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. திரையில் வெளியான பின்பு இந்த ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகும். திரையில் பெரிய வரவேற்பு இல்லாத கலைப்படங்கள் மற்றும் விருதுப் பெற்ற படங்கள் பொருளாதார ரீதியாக வெற்றிப் பெற இந்த ஓடிடி உதவும். மேலும் மலையாளப் படங்களை உலகம் முழுவதும் தரமான ஒலி, ஒளியமைப்புடன் வெளியிடவும் இது உதவும்."

நவம்பர் 1 முதல் இந்த ஓடிடி செயல்பாட்டிற்கு வரும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT