செய்திகள்

ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் (புகைப்படங்கள்)

20th May 2022 03:21 PM

ADVERTISEMENT

 

நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இதன் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், யூ டர்ன், கிளாப் போன்ற தமிழ்ப் படங்களில் ஆதியும் டார்லிங், கோ 2, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, ராஜவம்சம் போன்ற தமிழ்ப் படங்களில் நிக்கி கல்ராணியும் நடித்துள்ளார்கள். யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதலர்கள் ஆனார்கள். 

கடந்த மார்ச் 24 அன்று ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஆர்யா, நானி, சந்தீப் கிஷன் போன்ற திரைப்பிரபலங்கள் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள். 

ADVERTISEMENT

திருமணப் புகைப்படங்களை ஆதியும் நிக்கி கல்ராணியும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

 

Tags : aadhi
ADVERTISEMENT
ADVERTISEMENT