செய்திகள்

தி லெஜண்ட்: ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2-வது பாடல் வெளியானது

20th May 2022 01:46 PM

ADVERTISEMENT

 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜண்ட் படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஊர்வசி ரெளடேலா, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் முதல் பாடலான மொசலோ மொசலு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் 2-வது பாடலான, வாடிவாசல் இன்று வெளியாகியுள்ளது. ஸ்னேகன் எழுதிய இந்தப் பாடலை பென்னி தயால், ஜொனிடா காந்தி, ஸ்ரீவித்யா ஆகியோர் பாடியுள்ளார்கள். இப்பாடலுக்கு நடனம் - ராஜூ சுந்தரம். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT