செய்திகள்

பா. இரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

19th May 2022 06:05 PM

ADVERTISEMENT

 

பா. இரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் படமொன்றை இயக்கி வருகிறார். இதற்கடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பா. இரஞ்சித். இதையடுத்து கமல் ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் மீதமுள்ள காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு பா.இரஞ்சித் படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொள்ளவுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT