செய்திகள்

அருள்நிதி நடிப்பில் உருவான ‘டி ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

19th May 2022 06:04 PM

ADVERTISEMENT

 

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘டி ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

யூடியூபில் எருமசாணி சேனல் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் விஜய். இவர் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள   ‘டி ப்ளாக்’  திரைப்படம் வருகிற ஜுலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா நடிக்க, கரு பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஷ், விஜய் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்னர். ரோன் எதன் யோஹனன் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விக்ரம் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் சொன்ன வார்த்தை...நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

ADVERTISEMENT
ADVERTISEMENT