செய்திகள்

நயன்தாரா நடிப்பில் புதிய திரில்லர் படம்: டீசர் இதோ

16th May 2022 11:26 AM

ADVERTISEMENT


நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஓ2 (O2) திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. 

அறிமுக இயக்குனர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடைத்திருக்கும் படம் ஓ 2.

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரித்துள்ளனர். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இத்திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியா நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே மாயா, ஐரா ஆகிய திரில்லர் படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது மீண்டும் திரில்லர் பாணி கதையில் நடித்துள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT