செய்திகள்

நன்றி ஐயா: பத்தல பத்தல பாடல் குறித்து சாண்டி நெகிழ்ச்சி

12th May 2022 04:47 PM

ADVERTISEMENT

 

விக்ரம் படத்தில் கமல் ஹாசன் நடனமாடிய பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சாண்டி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்  நடித்துள்ள படம் - விக்ரம். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜுன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 15 அன்று படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் டிரெய்லரும் வெளியாகவுள்ளன.  அனிருத் இசையில் உருவான பத்தல, பத்தல பாடல் நேற்று மாலை வெளியானது. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், இதுவரை 10 மில்லியன் (1 கோடி) பார்வைகளைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபல நடன இயக்குநர் சாண்டி, இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

திரையரங்கில் அனைவரும் முழுப் பாடலையும் பார்க்கவேண்டும் என ஆவலாக உள்ளேன். நம் உலக நாயகனின் ஆட்டம் வேற மாதிரி. அவருக்கு 67 வயது என்று சொன்னால் நம்புவீர்களா? கமல் சார் படத்தில் என்னுடைய பெயரைப் பார்ப்பது ஒரு ரசிகனாக அற்புதமான தருணம். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி ஐயா. அனிருத், கிரிஷ் கங்காதரனுக்கு நன்றி. மறக்காம ரீல்ஸ் பண்ணுங்க. டான்ஸ் பண்ணுங்க. வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழுங்கள், கொண்டாட்டமாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT