நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | கமலின் விக்ரம் படத்தில் சூர்யா?: ரசிகர்களுக்கு காத்திருக்கும் 'ட்விஸ்ட்'
ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களும் வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே யூடியூபில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.