செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்

12th May 2022 11:01 AM

ADVERTISEMENT

 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்துள்ளார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசை. ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது. 

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் மே 20 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய மொழிகளின் பதிப்பு ஜீ5 ஓடிடியிலும் ஹிந்தி ஆர்ஆர்ஆர் நெட்பிளிக்ஸிலும் வெளியாகவுள்ளன. அன்றைய தினம் ஜூனியர்  என்டிஆர்-ன் பிறந்த நாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் படத்தை ஓடிடியில் காண ஆவலாக உள்ளார்கள். 

Tags : RRR
ADVERTISEMENT
ADVERTISEMENT