செய்திகள்

லாஜிக் இல்லாத போதுதான் மேஜிக் நடக்கும்: இம்தியாஸ் அலி

12th May 2022 01:08 PM

ADVERTISEMENT

 

சண்டிகர்: சண்டிகர் இசை மற்றும் திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய பிரபல இந்தி சினிமா இயக்குநர் இம்தியாஸ் அலி சினிமா எனும் கலையில் மேஜிக் நிகழ வேண்டுமானால் லாஜிக் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

சண்டிகரில் 2 நாள் விழாவாக நடைப்பெற்ற இசை மற்றும் திரைப்பட விழாவில் பிரபல சின்ன சார்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் மாணவர்கள், ரசிகர்கள் கேள்விக்கு இம்தியாஸ் அலி சுவராஸ்யமான பதில்களை அளித்தார். சினிமா சார்ந்த நுணுக்கமான விஷயங்களை பற்றி பேசினார். இதில் முக்கியமான சில விஷயங்கள் பின்வருமாறு: 

சினிமா அல்லது கலை என்பது நமது எண்ணங்களை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி. எதார்த்தம் மாய எதார்த்தம் உடைபடும் தருணங்களே சினிமா. மேலும் நாம் புரிந்து ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். நாம் தர்க்கத்துக்கு அப்பால் உள்ளவற்றையும் சினிமாவில் முயன்று பார்க்கலாம். இந்த சமூக கட்டமைப்புக்குள் இருந்தே சமூகத்தை விமர்சிக்க வேண்டும். 

ADVERTISEMENT

இறுதியாக சண்டிகர் பலக்லைக்கழகத்துக்கு இந்த ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT