செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான்: டிரெய்லர் எப்போது?

5th May 2022 06:39 PM

ADVERTISEMENT


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்கஅஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல மலையாள நடிகை

சிவகார்த்திகேயன், அனிருத் காம்போவில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் வழக்கம்போல் ஹிட் அடித்துள்ளன. படம் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT

நாளை நடைபெறவுள்ள பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லரானது நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT