செய்திகள்

பிரபல நடிகை புகார்: இயக்குநர் கைது

5th May 2022 03:02 PM

ADVERTISEMENT

 

பிரபல நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து, அவர் சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மலையாளர் இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். விருதுகள் பெற்ற பல படங்களை சணல் குமார் இயக்கியுள்ளார். கயட்டம் என்கிற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்தார். 

இந்நிலையில் சமூக ஊடங்களில் தன்னை அவமானப்படுத்தி வருவதாகவும் தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் எழுதுவதாகவும் மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இன்று காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் சணல் குமார் சசிதரன்.  தான் கைது செய்யப்பட்டதை ஃபேஸ்புக்கில் நேரலை விடியோவாகவும் அவர் வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT