செய்திகள்

பிறந்த நாள்: ‘பிக் பாஸ்’ ஷிவானி வெளியிட்ட புகைப்படங்கள்

5th May 2022 04:31 PM

ADVERTISEMENT

 

தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஷிவானி.

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழை அடைந்தார் ஷிவானி. மாடலாக இருந்து நடிகையானவர். சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராமில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஷிவானி. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவானி, புதிய புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT