செய்திகள்

ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளைப் பொய்யாக்கி...: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

2nd May 2022 03:20 PM

ADVERTISEMENT

 

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த படம் - காத்துவாக்குல ரெண்டு காதல். இசை - அனிருத். இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்புக்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

பெரும்பான்மையான பொதுமக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளைப் பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT