செய்திகள்

சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்

29th Mar 2022 12:56 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனிடையே நடிகர் விஜய்யின் பேச்சை கேட்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 

இதையும் படிக்க | நடிகர் சூரியிடம் போலீஸ் விசாரணை

ADVERTISEMENT

'பீஸ்ட்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாம். இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

'பீஸ்ட்' திரைப்படத்துடன் 'கேஜிஎஃப் 2' திரைப்படமும் வெளியாவதால் கடுமையான போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் 'கேஜிஎஃப் 2' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய யஷ், இது ஒன்றும் அரசியல் அல்ல. இரண்டு படங்களுக்கும் போட்டியில்லை. கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட். இரண்டு படங்களையும் பாருங்கள். இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள் என்று தெரிவித்திருந்தது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT