செய்திகள்

'ஆர்ஆர்ஆர்' படத்தில் தனது காட்சிகள் குறைப்பு: கோபத்தில் பதிவுகளை நீக்கிய ஆலியா

DIN

ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' கடந்த வெள்ளியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் 3 நாட்களில் ரூ.500 கோடி அளவுக்கு வசூலைப் பெற்றுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் கீரவாணியின் இசையும், செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்த நிலையில் நடிகை ஆலியா பட் படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். மேலும் இயக்குநர் ராஜமௌலியை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளாராம்.

நாடு முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அவருக்கு ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT