பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ராதே கிருஷ்ண குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிராபகரனின் பாடல்களும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் வெகுவாக பாராட்டப்பட்டது. தமன் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்திருந்தரா்.
இதையும் படிக்க | ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' படத்தை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் : ''நீட் பத்தி...''
இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரஸ் நிறுவனங்கள் தயாரித்திருந்தன. தமிழில் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்திய அளவில் இந்தப் படம் ரூ.220 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்தப் படம் ரசிகர்களைக் கவரவில்லை.
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி வெளியான பிறகு இந்தப் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.