செய்திகள்

பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் நடிகை: சுவாரசியத் தகவல்

28th Mar 2022 02:44 PM

ADVERTISEMENT

 

'நந்தா' படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலா. நந்தா படத்துக்கு பிறகே நடிகர் சூர்யா ஒரு நல்ல நடிகர் என அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் ஒரு கலகலப்பான நடிகராக சூர்யா தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். 

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணி

ADVERTISEMENT

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் இணையவிருக்கின்றனர். சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 28) துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். 

 

இதையும் படிக்க | 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கும் நடிகை லைலா

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கிரித்தி ஷெட்டி

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரித்தி ஷெட்டி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு

பாலாவுடன் இணைவது குறித்து பகிரந்துகொண்ட சூர்யா, என்னுடைய ஆக்சன் என சொல்வதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு இன்று அது நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT