செய்திகள்

6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம்: சிறந்த நடிகர் வில் ஸ்மித்... - முழு விவரம்

28th Mar 2022 11:28 AM

ADVERTISEMENT

 

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகள் பெற்ற  படங்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த முழு விவரங்கள் பட்டியல் இதோ. 

ஆஸ்கர் விழாவில் சிறந்த படமாக சியான் ஹெடர் இயக்கிய 'கோடா' (Coda)தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக 'கிங் ரிச்சர்டு' படத்துக்காக வில் ஸ்மித் சிறந்த நடிகராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் சிறந்த திரைக்கதை (தழுவல்) விருதை 'கோடா' படத்துக்காக சியான் ஹெடர் பெற்றார். மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை 'கோடா' படத்துக்காக வென்ற டிராய் கோட்சூர், ஆஸ்கர் விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை பெற்றார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆஸ்கர் விருது விழா: மனைவியைக் கிண்டலடித்த நடிகரை அறைந்த வில் ஸ்மித்

சிறந்த சர்வதேச திரைப்படமாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'டிரைவ் மை கார்' திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு என்ற ஆறு விருதுகளை 'டுன்' திரைப்படம் வென்றது. 

'டுன்' படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதை ஜோ வாக்கரும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக பேட்ரிஸ் வெர்மெட் மற்றும் சூசன்னா சிபோஸும், சிறந்த பின்னணி இசைக்காக ஹான்ஸ் ஜிம்மரும் ஆஸ்கர் விருது பெற்றனர். 

இதையும் படிக்க | சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

சிறந்த நடிகையா 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' படத்துக்காக ஜெசிகா சாஸ்டெயின், சிறந்த அனிமேசன் படமாக 'என்காண்டோ', சிறந்த துணை நடிகையாக ஹரியானா டிபோஸ்,  சிறந்த திரைக்கதையாசிரியராக 'பில்ஃபெஸ்ட்' படத்துக்காக சர் கென்னித் ப்ரானாவும் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக 'க்ரூயெல்லா' படத்துக்காக ஜென்னி பீவனும் பெற்றனர்.

சிறந்த ஆவணப்படமாக 'சம்மர் ஆஃப் சோல்', சிறந்த அனிமேஷன் குறும்படமாக 'தி விண்ட்ஷில்ட் வெப்பரும், சிறந்த ஆவண குறும்படமாக தி 'குயின் ஆஃப் பாஸ்கெட்பால்' ஆகிய படங்கள் விருதுகளை வென்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT