செய்திகள்

''விக்னேஷ் சிவன் - நயன்தாராவை கைது பண்ணுங்க'': பரபரப்பு புகார்

22nd Mar 2022 10:55 AM

ADVERTISEMENT

 

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சென்ன காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''நடிகர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' பட அறிவிப்பை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் பட்டாசு வெடித்து கொண்டியுள்ளனர். 

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பட நிறுவனம்தான் ரௌடி பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ரௌடிகளை ஒழிக்க, தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | '3' படத்துக்கு பிறகு உண்மை காதல் கதையை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வெளியான போஸ்டர்

ஆனால் சமூக பொறுப்பில்லாமல் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், ரௌடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரௌடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் நடத்துகின்றனர். இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்'' என்று அவரது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT