செய்திகள்

அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்த தகவல்

19th Mar 2022 04:46 PM

ADVERTISEMENT

 

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் நல்ல வசூலை இந்தப் படம் பெற்றது. 

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜி5 ஓடி தளத்தில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி, அல்லது 25 தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தபடி படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க | ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?

ADVERTISEMENT

வலிமை படத்தில் இயக்குநர் வினோத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாடல்களுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள ஏகே 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT