செய்திகள்

கமல் நடிக்கும் விக்ரம்: மேக்கிங் விடியோவுடன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

14th Mar 2022 12:23 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், அர்ஜுன் தாஸ், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம், நரைன் போன்றோர் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கும் படம் என்பதால் விக்ரமுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இசை - அனிருத், ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன். 

இந்நிலையில் இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் என்பதால் விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 அன்று வெளியாகும் இப்படத்தின் மேக்கிங் விடியோவும் இன்று வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT