செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரிக்கணுமா? 'சூது கவ்வும்' பாணியில் விடியோ பகிர்ந்த நடிகை

10th Mar 2022 11:32 AM

ADVERTISEMENT

 

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வினோதினி பேசும் விடியோவை பகிர்ந்துள்ளார். 

அந்த விடியோவில் நடிகை வினோதினி, ''உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பாளர்கள் அதிகரிக்க வேண்டுமா? ஒரு போஸ்ட் போடுங்கள். போஸ்ட் போட்டிருக்கிறேன் என ஒரு ஸ்டோரி போடுங்கள். போஸ்ட்டுக்கு ஒரு இசையை இணையுங்கள். போஸ்ட் போட்டிருக்கிறேன் என்று போட்ட ஸ்டோரியில் ஒரு இசையை இணையுங்கள். 

அதே போல ரீல்ஸ் போடுங்கள். ரீல்ஸ் போட்டிருக்கிறேன் என ஒரு ஸ்டோரி போடுங்கள். ரீல்ஸ் பேட்டிருக்கிறேன் என போட்ட ஸ்டோரியுடன் ஒரு இசையை இணையுங்கள். பின்னர் ஒரு ஸ்டோரி போடுங்கள். அந்த ஸ்டோரிக்கு வேறு ஒரு இசையை இணையுங்கள். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - எப்படி இருக்கிறது ? - திரை விமர்சனம்

இப்படி திரும்ப திரும்ப பதிவிட்டால் அவர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புதான் இருக்கிறது. 1. உங்களை ஃபாலோ பண்ணுவது 2. உங்களை கொலை செய்வது. 

வீடு தேடி வந்து கொலை செய்ய இங்கு யாராலும் முடியாது. காரணம் எல்லோரும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதனால் வேறு வழியல்லாமல்  உங்களை ஃபாலோ செய்வார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - எப்படி இருக்கிறது ? - திரை விமர்சனம்

அவரது விடியோ, சூது கவ்வும் படத்தில், ஆட்களைக் கடத்தி பணம் பறிப்பதற்காக,  விஜய் சேதுபதி 5 விதிமுறைகளை சொல்லும் காட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வினோதினி 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேம் ஓவர், ராட்சசன், ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் வினோதினியின் நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vinodhini Vaidynathan (@thevinodhini)

ADVERTISEMENT
ADVERTISEMENT