செய்திகள்

வங்கிக்கு சென்ற திரைப்பட இயக்குநரை திருடன் என கைது செய்த காவல்துறை: அப்படி அவர் என்ன செய்தார் ?

10th Mar 2022 12:58 PM

ADVERTISEMENT

 

பிளாக் பான்தர் படத்தை இயக்கிய ரியான் கூக்லர் தலையில் தொப்பி, கண்ணாடி, முகக் கவசம் அணிந்துகொண்டு அட்லாண்டா பகுதியில் உள்ள ஃபேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கிக்கு சென்றுள்ளார். 

பணம் எடுப்பதற்கான ரசீதுடன் காகிதம் ஒன்றையும் வங்கி காசாளரிடம் அவர் அளித்திருக்கிறார். அந்தக் காகிதத்தில் 'எனது கணக்கில் இருந்து 12,000 டாலர் பணம் எடுக்க வேண்டும். தயவுசெய்து பணத்தை வேறு இடத்தில் வைத்து எண்ணுங்கள்.

இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - எப்படி இருக்கிறது ? - திரை விமர்சனம்

எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள்' என அந்த காகிதத்தில் குறிப்பிடப்படிருந்தது. பெரிய தொகை என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

முகக் கவசம், கண்ணாடி, தொப்பி என தன் தோற்றத்தை முழுமையாக ரியான் மறைத்திருந்ததாலும், அவரது வித்தியாசமான அனுகுமுறையாலும் அவரை திருடன் என நினைத்த காசாளர், உடனடியாக தனது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - எப்படி இருக்கிறது ? - திரை விமர்சனம்

இதனையடுத்து அவர் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து வங்கிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரியான் கூக்லரின் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்துள்ளனர். பின்னர் அவர் யார் என்று தெரிந்த பிறகு காவல்துறையினர் ரியானை விடுவித்துள்ளனர். இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT