செய்திகள்

அருமை தம்பி சூர்யா - கமல்ஹாசன் பாராட்டு

30th Jun 2022 11:47 AM

ADVERTISEMENT

 

நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது குழுவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதனயைடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகும் முதல் தென்னிந்தி ய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெறுகிறார். 

அவருக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகள் வானமே எல்லை'' என வாழ்த்து தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ’நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்கிறேன்..’: முதல்வருக்கு சூர்யா நன்றி

இதனையடுத்து முதல்வரின் வாழ்த்துக்கு சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முய்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் என பதிலளித்துள்ளார். 

மேலும் அகடாமி குழுவுக்கு சூர்யா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், எனக்கு அழைப்புவிடுத்ததற்கு நன்றி. நான் உங்கள் அழைப்பை ஏற்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கடுமையாக உழைத்து உங்களைப் பெருமைப் பட செய்வேன் என தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், அருமை தம்பி சூர்யா, உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT