செய்திகள்

பொன்னியின் செல்வன் பின்னணி இசை - டிரம்ஸ் சிவமணி பகிர்ந்த விடியோ

30th Jun 2022 03:38 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் பின்னணி இசையமைக்கும் விடியோவை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்துள்ளார். 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவில் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னணி இசை பணிகளில் பங்காற்றியுள்ள டிரம்ஸ் சிவமணி விடியோ பகிர்ந்துள்ளார். இந்த விடியோவில் வந்தியத் தேவனாக கார்த்தி வரும் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விருமன் படத்துக்கு பிறகு இயக்குநர் முத்தையாவின் அடுத்தப்பட ஹீரோ இவரா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். 

மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT