செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் வெங்கல் ராவ்

30th Jun 2022 08:49 PM

ADVERTISEMENT

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார்.

ஆந்திரத்தை பூர்விகமாக கொண்ட சண்டைக் கலைஞரான வெங்கல் ராவ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சண்டைக் காட்சிகளில் பங்கேற்றுள்ளார். 

வடிவேலுவுடனான நகைச்சுவை காட்சிகளின் மூலம் பிரபலமடைந்த வெங்கல் ராவ் தனது வித்தியாசமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.

இதையும் படிக்க | கமல் பாணியில் மாயோன் இயக்குநருக்கு பரிசளித்த சிபி சத்யராஜ்

ADVERTISEMENT

சிறுநீரக பிரச்னை காரணமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சை நிறைவடைந்த நிலையில் அவர் இன்று வீடு திரும்பினார். இந்தத் தகவலை சினிமா செய்தித் தொடர்பாளர்  கோவிந்த ராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Tags : Vengal Rao
ADVERTISEMENT
ADVERTISEMENT