செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் செல்வராகவன்

29th Jun 2022 02:51 PM

ADVERTISEMENT

 

செல்வராகவன் நடித்துவரும் பகாசூரன் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. இவர் அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கிவருகிறார். 

இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'சமூக அக்கறை கொண்ட....' நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

​இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான மேக்கப்புடன் செல்வராகவன் இருக்கும் இந்தப் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT