செய்திகள்

கமலின் விக்ரம் ஓடிடியில் வெளியாகும் தேதி ? - ப்ரமோ விடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

29th Jun 2022 12:11 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான 4 வாரங்களுக்கு பிறகும் இந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை. 

இந்தப் படம் ரூ.400 கோடி வசூலித்துள்ள நிலையில், அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க'' - நடிகை மீனாவின் கணவர் மரணம் குறித்து குஷ்பு வேண்டுகோள்

இந்த நிலையில் இந்தப் படம் ஜுலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று தகவல் பரவியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அதற்குள்ளாக ஓடிடியில் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது புதிய ப்ரமோவுடன் இந்தப் படம் ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாவதை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உறுதி செய்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT