செய்திகள்

ஹரிஷ் கல்யாண் படத்துக்கு 'டீசல்' என தலைப்பு - வெளியானது முதல் பார்வை போஸ்டர்

29th Jun 2022 02:12 PM

ADVERTISEMENT


ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

ஹரிஷ் கல்யாண் தற்போது ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தல் டீசல் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

போஸ்டரில் டீசல் டேங்க் முன்பு அதுல்யாவை ரசித்துக்கொண்டிருக்கிறார். மற்றொரு போஸ்டரில் டீசல் இடும் டியூபை வைத்துக்கொண்டு ஆக்ரோசமாக முறைக்கிறார். இந்தப் படம் சாதாரண மனிதர்களின் அன்றாட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சல்மான் கானுடன் 4 நாயகிகள், சமந்தா, தமன்னா, ராஷ்மிகா, பூஜா!

காதல் சார்ந்த படங்களில் நடித்துவந்த ஹரிஷ் கல்யாண் முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா வழக்கறிஞராக நடித்துள்ளாராம். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT