செய்திகள்

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் படத்துக்கு அஜித் பட தலைப்பு ?

29th Jun 2022 04:17 PM

ADVERTISEMENT

 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் படத்துக்கு சிட்டிசன் என்ற பெயர் பரிந்துரையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதனையடுத்து ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். 

இதையும் படிக்க | நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி

ADVERTISEMENT

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு சிட்டிசன் என்ற பெயர் பரிந்துரையில் இருக்கிறதாம். சிட்டிசன் என்ற பெயரில் தமிழில் நடிகர் அஜித் படம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் தலைப்பே இறுதியாகுமா ? அல்லது மாற்றப்படுமா? என விரைவில் தெரிந்துவிடும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT