செய்திகள்

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி

29th Jun 2022 03:40 PM

ADVERTISEMENT

 

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திரத்தை பூர்விகமாக கொண்ட சண்டைக் கலைஞரான வெங்கல் ராவ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சண்டைக் காட்சிகளில் பங்கேற்றுள்ளார். 

வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கத் துவங்கியதும் மிக பிரபலமானார். நகைச்சுவை காட்சிகளில் இவரது வித்தியாசமான உடல்மொழியும், வசன உச்சரிப்பும் ரசிகர்களிடையே மிக பிரபலம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் செல்வராகவன்

 

திரைப்படங்களில் நடித்தாலும் ஏழ்மை நிலையிலேயே இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்காததால் இவருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில் சிறுநீரக பிரச்னை காரணமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். 

Tags : Vengal Rao
ADVERTISEMENT
ADVERTISEMENT