செய்திகள்

ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா - ரசிகர்கள் கொண்டாட்டம்

29th Jun 2022 11:12 AM

ADVERTISEMENT

 

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். அவருடன் ஹிந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  ''தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க'' - நடிகை மீனாவின் கணவர் மரணம் குறித்து குஷ்பு வேண்டுகோள்

மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும் ஆவணப் படங்கள் பிரிவில், சுஷ்மித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் ஆகிய இருவருக்கும், எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்துவருகின்றனர். சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT