செய்திகள்

ஒரு வழியாக விக்ரம் ரசிகர்களின் காத்திருப்புக்கு அறிவிப்பு மூலம் கிடைத்தது பதில் !

28th Jun 2022 10:54 AM

ADVERTISEMENT

 

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடித்துள்ளார். 

இதையும் படிக்க | கமல் உடற்பயிற்சி செய்யும் விடியோ ப்ரமோவை வெளியிட்ட லோகேஷ் - 'போர்கண்ட சிங்கம்.... '

ADVERTISEMENT

இந்தப் படம் எப்பொழுது வெளியாகும் என காத்திருந்து விக்ரமின் ரசிகர்கள் தங்கள் பொறுமையை இழந்தனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்குவரும் என தயாரிப்பாளர் லலித் குமார் அறிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிடும்போது தயாரிப்பாளர் லலித் குமாரின் பெயரை இயக்குநர் அஜய் ஞானமுத்து குறிப்பிடவில்லை. இதனையடுத்து தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் அஜய் ஞானமுத்து படத்துக்கான பட்ஜெட்டை விட அதிகம் செலவிட்டதாகவும், தயாரிப்பாளர் பொறுமையாக இருந்ததாகவும் ஆனால் அவரது பெயரைக் கூட இயக்குநர் குறிப்பிடாதது கண்டிக்கத்தக்கது என கடுமையாக பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, பட்ஜெட்டில் உள்ளதை விட அதிகம் செலவிடவில்லை, அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது. தயாரிப்பாளரின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என விளக்கமளித்தார். இந்த விவகாரம் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படிக்க | நடிகர் 'பூ' ராமு காலமானார்

 கோப்ரா படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தமிழகத்தில் வெளியிடுகிறார். முன்னதாக தயாரிப்பாளர் லலித் குமார், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசினை வழங்கினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT