செய்திகள்

'ஓ அண்டாவா ?' சல்மான் கானை மயக்கிய சமந்தாவின் நடனம் - வைரலாகும் விடியோ

28th Jun 2022 01:11 PM

ADVERTISEMENT

 

புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் தான் தனக்கு பிடித்த பாடல் என சல்மான் கான் தெரிவித்த விடியோவை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

புஷ்பா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சமந்தா நடனமாடிய ஓ அண்டாவா பாடல் இந்தியா முழுக்க பிரபலமானது. அந்தப் பாடலை முனுமுனுக்காத இந்தியர்களே இல்லை எனலாம். 

அந்த ஒரு பாடல்தான் புஷ்பா படத்தை ஆந்திரா, தெலங்கானா தாண்டி நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. அந்த வகையில் புஷ்பா படத்தின் வெற்றிக்கு ஓ அண்டாவா பாடல் பெரும் பங்கு வகிக்கிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  ''திரௌபதி குடியரசுத் தலைவர்னா, அப்போ பாண்டவர்கள்?'' - இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என சல்மான் கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சல்மான் கான், ஓ அண்டாவா என பாடியபடி அங்கிருந்து செல்கிறார். இந்த விடியோவை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT